ஆண்களுக்கான எளிய அழகு குறிப்புகள்-Face beauty tips in tamil

face beauty tips in tamil
ன்று இந்தப் பதிவில் என்ன பார்க்கப் போகின்றோம் என்றால் ஆண்கள் வசீகரமான தோற்றத்திற்கு செய்ய வேண்டிய 7 விஷயங்கள் என்ன என்பது பற்றி தான் பார்க்கப் போகிறோம். நம் மீது நல்ல அபிப்பிராயங்களை உண்டாக்குவது என்பது நம்முடைய தோற்றம் தான். நாம் பேசுவதை விட நம்முடைய உடல் மொழி நம்மைப் பற்றிய பிம்பத்தை மற்றவர்களுக்கு ஏற்படுத்தும். எப்படி நீங்கள் உங்களுடைய ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்களோ அதே போன்று உங்கள் வெளிதோற்றத்திற்கும் நீங்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

அதிகப்படியாக வியர்வை


face beauty tips in tamil அதிக வியர்வையால் ஏற்படும் பாதிப்புகள்

ஆண்களுக்கு அதிகப்படியாக வியர்வை வரும்; எனவே சுத்தமாக முகத்தை பராமரிக்காமல் விட்டால் அதுவே நம்முடைய அழகை கெடுக்கும் விதமாகவும் பருக்களை உண்டாக்கும். இதனை தவிர்க்க முகத்திற்கு ஃப்ளின்சிங் செய்ய வேண்டியது அவசியம். இதன் மூலம் முகத்தில் ஏற்படும் கரும்புள்ளி முகப்பரு கருவளையம் என்பவற்றை தவிர்க்கலாம்.

முடி பராமரிப்பு

ஆண்களின் புற அழகில் மிக முக்கிய பங்கு வகிப்பது தலைமுடி ஆகும். நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பூவில் அதிகப்படியான விட்டமின் இ (Vitamin - E ) இருக்கிறதா என்று பார்த்து வாங்குங்கள்; ஏனென்றால் இவை முடியின் வேர்களுக்கு அதிக வலு சேர்க்கும். மற்றும் அதிக அளவு வாசனை மிக்க ஷாம்புகளை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

முகச்சவரம்

முகச்சவரம் முக அழகு

ஆண்களின் அன்றாட பிரச்சனைகளில் ஒன்றாக இந்த முகச்சவரம் என்பது மாறி விடுகின்றது. சில வேலைகளுக்கு செல்லும் ஆண்கள் முகச்சவரம் தொடர்ந்து செய்து கொள்ளவேண்டும் என்ற கட்டாயம் காணப்படுகின்றது. ஆனால் சில ஆண்களுக்கு முகச்சவரம் செய்த பின்னர் முகத்தில் ஏற்படும் அரிப்பு,நிறம் மாறுதல் போன்றவற்றால் பல சங்கடங்களை சந்திப்பார்கள். அப்படி இருக்கிறவர்கள் முதலில் தாடியை சூடான நீரில் நினைத்துக்கொள்ளுங்கள் அதன் பின்னர் சிறிது நேரம் கழித்து முகச்சவர கிறீம் தடவி முகச்சவரம் செய்து கொள்ளுங்கள்.

Sun cream 

sun cream in tamil face beauty tips in tamil

வெயில் படும் இடங்களில் கண்டிப்பாக சன்ஸ்க்கிறீம் தடவ வேண்டியது அவசியம். நீங்கள் பயன்படுத்தும் சன்ஸ்கிரீன் எஸ் பி எஃப் ரேட்டிங் (SPF Rating) குறைந்த அளவில் அது இருத்தல் வேண்டும். நீங்கள் வெளியில் செல்வதற்கு 15 நிமிடங்களுக்கு முன்னதாகவே க்ரீமை தடவிக் கொள்ளுங்கள்.

காது மற்றும் மூக்கு பராமரிப்பு

வாரம் ஒரு முறையாவது காது மற்றும் மூக்கில் வளரும் முடிகளை நீக்கி விடுங்கள். ஒருவரை சந்திக்கும் பொழுது கைகுலுக்கி நட்பு பாராட்டுவது இயல்பு இது ஒரு வகை நாகரீகம் கூட எனவே கைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். கைகளில் அதிக முடி இருப்பவர்கள் தினமும் அதை சவரம் செய்து விடுங்கள். ஒரு இஞ்சிக்கும் நீளமாக முடியும் வைத்திருப்பதை தவிர்த்துவிடுங்கள். 

சரும வறட்சி

ஆண்களுக்கு அதிகமாக சருமம் வறண்டு காணப்படும். சருமம் வறண்டு காணப்பட்டால் அது பல்வேறு சரும பாதிப்புகளை உண்டாக்கும். இதனால் சருமத்திற்கு வரட்சி ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். 

ஆரோக்கியமான உணவு

healthy foods for face beauty in tamil

சத்துள்ள ஆகாரம் புறத் தோற்றத்திற்கு மிகவும் அவசியமானது உணவு ஆகும். காலை உணவை தவிர்ப்பது மட்டுமன்றி சிகரெட்டையும் டீயையும் குடித்துவிட்டு பசியை மந்தப் படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. இது ஆரோக்கியத்திற்கும் மட்டுமல்ல உடல் தோற்றத்தையும் கெடுக்கின்றது. மற்றும் அடிக்கடி டீ காபி குடிப்பதால் வாய் துர்நாற்றம் ஏற்படும் என்பதால் அடிக்கடி டீ காபி குடிப்பதை தவிர்த்து விடுங்கள்.
இந்தப் பதிவில் நாம் சொன்ன டிப்ஸை கடைப்பிடித்து ஹாண்ட்சம் ஆக மாறிவிடுங்கள்.
Reactions