நாம் தினமும் சரியான செய்யும் தவறான 7 விஷயங்கள்

Activities that we do wrong in tamil

ணக்கம் நண்பர்களே நமது அன்றாட வாழ்க்கையில் தனிப்பட்ட ரீதியில் நிறைய விடயங்களை செய்கின்றோம். அப்படி நாம் சரியாக செய்யும் பல விடயங்கள் தவறாக இருக்கின்றது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? உண்மையில் அறிந்தோ அறியாமலோ நாம் சில விடயங்களை தவறாக பண்ணிக் கொண்டிருக்கிறோம். இந்த பழக்கங்களினால் சாதாரண பாதிப்புகள் முதல் பல்வேறு நோய்கள் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்து விடுகின்றது. அப்படி நாம் சரியாக செய்யக்கூடிய தவறான 7 விடயங்கள் என்ன என்பதை பற்றிதான் இந்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

நகம் கடிப்பது

நகம் கடிப்பதால் ஏற்படும் பாதிப்புகள்

சிலர் பார்த்தீர்கள் என்றால் ஏதாவது ஒரு ஆழ்ந்த சிந்தனையில் இருக்கும் பொழுதோ அல்லது அதிக கவலையோ கோபமோ படும்பொழுது நகம் கடிக்கும் பழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள். இது ஒரு தவறான பழக்கம்; இப்படி நகம் கடிக்கும் பொழுது நகரங்களுக்கு இடையே இருக்கக்கூடிய அழுக்கு கிருமிகள் மற்றும் வயிற்றுக்குள் சென்று ஒவ்வாமை வயிற்றுளைவு வயிற்று வலி வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். எனவே நகம் கடிக்கும் பழக்கத்தை தவிர்ப்பது மிகவும் அவசியமான ஒன்று.

Cotton Swabs பயன்படுத்தல்

காதில் ஏற்படும் பாதிப்புகள்

நம்மில் பலர் பார்த்தீர்களென்றால் காதில் உள்ள அழுக்குகளை நீக்குவதற்காக Cotton Swabs பயன்படுத்துவார்கள். இது முற்றிலும் தவறான ஒரு பழக்கம். காதில் உள்ள அழுக்குகளை செவிப்பறையை நோக்கி இன்னும் உள்ளே தள்ளுகிறோம் என்பதுதான் உண்மை. அதுமட்டுமல்லாமல் சில சமயங்களில் செவிப்பறையில் பாதிப்புகள் ஏற்படுவது மட்டுமல்லாமல் காயங்கள் ஏற்படுவதற்கும் வாய்ப்பாக அமையும். இதற்குப் பதிலாக இரவு தூங்குவதற்கு முன்னர் இரண்டு துளி ஆலிவ் ஆயிலை காதில் விட்டு தூங்கும் பொழுது காலையில் காதில் உள்ள அழுக்குகள் அனைத்தும் தானாகவே வெளியேறிவிடும். எனவே Cotton Swabs பயன்படுத்தி காதில் உள்ள அழுக்குகளை நீக்குவதற்கு முயற்சிக்க வேண்டாம். இந்த முறையை முற்றாக தவிர்த்து விடுங்கள்.

கை கழுவுவது

கை கழுவுவதால் ஏற்படும் நன்மைகள்

நிறைய பேர் பார்த்தீர்களென்றால் கழிப்பறை சென்று வந்ததும் கையை வந்து சரியாக கழுவ மாட்டார்கள். ஒரு ஆய்வில் என்ன சொல்கிறார்கள் என்று பார்த்தீர்கள் என்றால் 62 சதவீதமான ஆன ஆண்களும் 40 சதவீதமான பெண்களும் கழிப்பிடத்தை பயன்படுத்திய பின்னர் சரியாக கை கழுவுவது இல்லை என்று சொல்கிறார்கள். ஒரு சதுர பரப்பளவு கழிப்பிடத்தில் பார்த்தீர்கள் என்றால் 50 ஆயிரத்திற்கும் அதிகமான வைரஸ் உள்ளது என்று கண்டறிந்து இருக்கிறார்கள். அதுவும் பொது கழிப்பிடத்தில் கூடுதலான வைரஸ் மற்றும் பாக்டீரியாக்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே நாம் கழிப்பிடத்தை பயன்படுத்திய பின்னர் கைகளை நன்றாக 
கழுவாமல் காய்கறிகள் வெட்டுவதோ உணவுகள் அருந்துவது பிற செயல்களில் ஈடுபடும் பொழுது வைரஸ் மற்றும் பாக்டீரியாக்கள் மிக எளிதாக நமது உடலுக்குள் சென்று பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. எனவே இதுபோன்ற பழக்கங்களையும் நாம் தவிர்க்க வேண்டும்.

பற் தூரிகை பாவிப்பது

பல் துலக்குவதால் ஏற்படும் நன்மைகள்

சிலர் பார்த்தீர்கள் என்றால் ஒரே பற்தூரிகையை தான் ஒரு வருடத்திற்கு மேலாக பயன்படுத்துவார்கள். இப்படி தொடர்ந்து ஒரே பற்தூரிகையை பயன்படுத்தும் பொழுது பல் சம்பந்தமான பிரச்சனைகள் முதல் இதயம் சம்பந்தமான பிரச்சினைகள் வரை உண்டாகலாம் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். எனவே கூடுமான வரைக்கும் இரண்டிலிருந்து மூன்று மாதங்களுக்கு ஒருமுறை புதிய தூரிகை பயன்படுத்துவது மிகவும் நல்லது.

சிகை தூரிகை

நிறைய குடும்பங்களில் பார்த்தீர்களென்றால் ஒரே ஒரு சீப்பை பயன்படுத்தி தான் வீட்டில் இருக்கக் கூடிய எல்லாருமே சிகை வாறுவார்கள்; இது ஒரு முற்றிலும் ஒரு தவறான பழக்கம். இப்படி அனைவரும் ஒரே சீப்பை பயன்படுத்துவதனால் முடி சம்பந்தமான பிரச்சினைகள் எளிதில் உண்டாவது மட்டுமல்லாமல்; குடும்ப அங்கத்தவர்களில் ஒருவருக்கு பொடுகு பிரச்சனை இருக்கு என்றால் குடும்பத்தில் உள்ள ஏனைய நபர்களுக்கும் அது இலகுவாக பரவிவிடும். எனவே அனைவரும் தனித்தனியான சீப்பு பயன்படுத்துவது மட்டுமல்லாமல் அதை சரியாக சுத்தமாக பயன்படுத்துவது நல்லது.

வெந்நீரில் குளித்தல்

ஒரு சில பேர் பார்த்தீர்களென்றால் காலையிலே சுடுநீரில் குளிப்பார்கள் இது ஒரு தவறான பழக்கம். இயற்கையாகவே பார்த்தீர்களென்றால் காலையிலே உடல் எப்பொழுதும் வழமைக்கு மாறாக சூடாகவே இருக்கும். எனவே அப்பொழுது சுடுநீரினால் நாம் குளிக்கும்பொழுது உடல்சூடு அதிகரிப்பது மட்டுமல்லாமல் உடல் சூட்டினால் உண்டாகக் கூடிய பிற உடல் நலக் கோளாறுகளையும் ஏற்படுத்தக்கூடும். காலையிலேயே சுடுநீர் பயன்படுத்திக் குளிப்பதை தவிர்த்துவிட்டு சாதாரணமாக நீரில் குளிப்பது நல்லது.

தொலைபேசி பயன்படுத்துவது

கழிப்பிடத்தில் தொலைபேசி பயன்படுத்தக்கூடாது

நாம் ஏற்கனவே பார்த்தோம் கழிப்பிடத்தில் நிறைய கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்கள் இருக்கும் என்பதை. இன்று இருக்கக்கூடிய காலகட்டத்தில் பார்த்தீர்களென்றால் தொலைபேசியையும் எங்களையும் பிரிக்க முடியாத காலமாக மாறிவிட்டது. கழிப்பிடத்தை பயன்படுத்தும் போது கூட ஒரு சுகாதார விழிப்புணர்வு இல்லாத படி இப்படி பயன்படுத்துவதால்; கழிப்பிடத்தில் உள்ள பாக்டீரியாக்கள் மட்டுமல்லாமல் கிருமிகளும் தொலைபேசியில் பரவுவதால் அது நமது உடலுக்கு இலகுவாக செல்வதற்கும் வாய்ப்பாக அமைந்துவிடும். அதுமட்டுமல்லாமல் டைபாய்டு போன்ற தொற்றுக் கிருமிகள் உண்டாவதற்கு வாய்ப்பாக அமைந்துவிடும். எனவே இது போன்ற விடயங்களை தவிர்த்துவிடுங்கள்.
Reactions