தொண்டை வலிக்கு வீட்டு வைத்தியம்-Throat infection home remedies in tamil

Throat infection home remedies in tamil

ன்று தொண்டை வலி தெண்டை கரகரப்பு தொண்டை தொற்று ( Throat infection ) என்பவை சரியாவதற்கு நாம் இலகுவாக வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய மருந்து ஒன்றை செய்யப் போகின்றோம். அந்த மருந்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தொண்டை வலி தொண்டை கரகரப்பு ஏற்படுவதற்கு முக்கியமான காரணம் என்ன என்று பார்த்தால்; முதலாவது ஒவ்வாமை காரணமாக தான் தொண்டை கரகரப்பு ஏற்படும்.
Also Read:- நாம் தினமும் சரியான செய்யும் தவறான 7 விஷயங்கள்

அதன்பின்னர் பார்த்தால் அதிகமா கத்தி பேசும்போது கூட சிலபேருக்கு தொண்டை வலி தொண்டை கரகரப்பு ஏற்படும். ஒரு சில பேருக்கு தொண்டையிலேயே ஈரப்பதம் இல்லாமல் உராய்வு ஏற்படும் போது கூட இந்த வலியுடன் கூடிய கரகரப்பு ஏற்படும்.

சிலபேர் பார்த்திர்கள் என்றால் மூக்கு வழியா சுவாசிக்காமல் வாய்வழியாக வாசிப்பார்கள். அப்படி இருக்கும் போது கிருமிகள் தொண்டை பகுதிக்குள் நேரடியாக சென்று விடும். வெளியில் புகை மாசு அதிகமாக உள்ள இடத்திலிருந்து சுவாசிக்கும்போது எமக்கு தொற்றுநோய் கிருமிகளின் தாக்கம் ஏற்பட்டு அதனால் தொண்டை வலி தொண்டை கரகரப்பு ஏற்படும். இப்படி எல்லாவிதமான பாதிப்புகளால் ஏற்படும் தொண்டை வலி தொண்டை கரகரப்பு சரி செய்வதற்கு என்ன செய்யலாம் என்று தான் நாம் இந்தப் பதிவில் பாக்க போறோம். அதற்கு தேவையான பொருட்கள்

காய்ச்சின பசும்பால் ஒரு டம்ளர் எடுத்துக்கொள்ளுங்கள். மிளகுத்தூள் அரை ஸ்பூன் அளவுக்கு எடுத்துக்கொள்ளுங்கள்; மற்றும் சமையலுக்கு உபயோகப்படுத்தும் மஞ்சள் தூள் ஒரு கால் ஸ்பூன் அளவுக்கு எடுத்துக்கொள்ளுங்கள். அடுத்து இனிப்புக்கு தேவையான அளவு பனங்கற்கண்டு எடுத்துக்கொள்ளுங்கள். இந்த பனங்கற்கண்டு இல்லை என்றால் அதற்கு பதிலாக பனைவெல்லம் கூட சேர்த்துக்கொள்ளலாம். இப்போ இந்த எல்லா பொருட்களையும் வைத்து தொண்டை வலி தொண்டை கரகரப்பு சரி பண்ணுவதற்கான மருந்தை நாம் தயாரிக்கலாம்.

இப்போ ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் அளவுக்கு காய்ச்சிய பசும்பாலை எடுத்துக்கொள்ளுங்கள். இதனுடன் நாம் எடுத்து வைத்திருக்கும் மஞ்சள்தூள் மிளகுத்தூளை சேர்த்துக்கொள்ளவும். இப்போது இவற்றை நன்றாக கலந்து விடவும். இப்போது பால் சூடாகி நல்லா கொதிக்கும் வரைக்கும் காத்திருங்கள். பால் நன்றாக பொங்கியதும் நாம் எடுத்து வைத்திருக்கும் பனங்கற்கண்டை சேர்த்துக் கொள்ளுங்கள். இதனை நன்றாக பாலுடன் கலந்த பின்னர் இதனை ஒரு டம்ளரில் மாற்றிக் கொள்ளுங்கள். தொண்டை வலி தொண்டை கரகரப்பு என்பவற்றை சரி செய்வதற்காக நாம் தற்போது செய்து வைத்திருக்கும் மருந்து தயாராகிவிட்டது.

தொண்டை வலி தொண்டை கரகரப்பு தொண்டை தொற்று ( Throat infection ) சளி இருமல் அதிகமாக இருக்கும்போது கூட உங்களுக்கு இவை வரும். இவற்றை சரிசெய்வதற்கும் சளி மற்றும் இருமலை சரி செய்து சளியை கரைத்து வெளியே தள்ளுவதற்கு இந்த மருந்து பயன்படுகின்றது. இதில் நாம் மஞ்சள் சேர்த்திருக்கிறோம். இந்த மஞ்சள் ஒரு மிகச் சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது; மற்றும் இதில் மிளகுத்தூள் கலந்து இருக்கிறோம்.

தொண்டை வலி தொண்டை கரகரப்பு இருக்கும்போது இந்த மிளகுத் தூளை போட்டு நாம் குடிக்கும் போது நமக்கு நல்ல இதமா இருக்கும். இதை காலை மாலை இரண்டு வேளை குடித்தால் போதும் ஒரே நாளில் உங்களுக்கு தொண்டை சார்ந்த பிரச்சனைகள் அனைத்தும் சரியாகிவிடும். இந்த மருந்தை வெறும் வயிற்றில் குடிக்கணும் அப்படியெல்லாம் கிடையாது நீங்க காலை மாலை எப்ப வேணாலும் நீங்க இந்த மருந்தை குடிக்கலாம்.

தொண்டை வலி தொண்டை கரகரப்பு இருமல் சளி இவை போன்ற நோய்கள் அதிகமாக இருக்கும் பொழுது இதை செய்து குடித்து பாருங்கள். இதை பெரியவங்க குடிக்கும்போது பனங்கற்கண்டு,பனை வெல்லம் சேர்க்காமல் குடிக்கலாம். இதை சிறு பிள்ளைகளுக்கும் கொடுக்கலாம். 5 வயசுக்கு மேல உள்ள குழந்தைகளுக்கும் இதனை கொடுக்கலாம். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
Reactions