குதிகால் வெடிப்பு பிரச்சனையை ஒரே வாரத்தில் குணமாக்கலாம்-Patti vaithiyam in tamil

siddha maruthuvam tamil குதிகால் வெடிப்பு பிரச்சனை

பாத வெடிப்பை போக்க கூடிய 2 எளிமையான வீட்டு வைத்திய முறைகளை தான் நாம் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம். பாத வெடிப்பு ஆனது சில பேருக்கு வலியை ஏற்படுத்தும்; மற்றும் பார்ப்பதற்கும் ஒரு அருவருப்பாக இருக்கும். இந்தப் பாத வெடிப்பை அப்படியே அலட்சியமாக விட்டு விட்டீர்கள் என்றால் அது அழுக்குகள் தங்குமிடமாக மாறிவிடும். இதற்காக நீங்கள் கடைகளில் விற்கக்கூடிய க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என்று அவசியமில்லை. வீட்டில் இருக்கக் கூடிய இயற்கையான பொருட்களை வைத்து கால்களில் ஏற்படக்கூடிய இந்தப் பாத வெடிப்பு பிரச்சனையை முற்றிலுமாக குணப்படுத்த முடியும். 

இந்தப் பதிவை வாசிக்க வந்த அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கு எங்களுடைய மனமார்ந்த நன்றிகள்.

பாத வெடிப்பு எதனால் வருகின்றது ?

நாம் குளிக்கும் போது எமது உடலை நன்றாக தேய்த்துக் குளிப்போம் ஆனால் பார்த்தீர்களென்றால் பாதத்தை அப்படியே விட்டுவிடுவோம். பாதத்தையும் நன்றாக தேய்த்து குளித்து வருபவர்களுக்கு இந்தப் பாத வெடிப்பு பிரச்சினை வராது. அதை அலட்சியமாக விட்டு விட்டீர்கள் என்றால் நாளடைவில் அழுக்குகள் தங்கி வெடிப்புகள் உண்டாகி விடும். சரியான அளவு இல்லாத பாதணிகளை அணிவது, கடினமான பாதணிகளை அணிவது இவை கூட இந்த பாத வெடிப்புக்கு ஒரு காரணமாக அமையும். வறட்சியான சீதோஷண நிலை, அளவுக்கு அதிகமான குளிர்ச்சி இவைகளும் பார்த்தீர்களென்றால் குதிகால் வெடிப்பிற்கு காரணமாக அமையும்.

உடல் எடை அதிகமாவது, தொடர்ந்து பாதணி அணியாமல் நடப்பது, அதிக நேரம் தண்ணீரில் நிற்பது இதெல்லாம் பார்த்தீர்களென்றால் குதிகால் வெடிப்பிற்கு ஒரு முக்கியமான காரணம் ஆகும். இந்த குதிகால் வெடிப்பை ஒரே வாரத்தில் சரிசெய்வதற்கு இரண்டு இயற்கையான வைத்தியங்களை தான் இந்த பதிவில் நாம் பார்க்கப் போகின்றோம்.

இதற்கு முதலில் ஒரு சுத்தமான கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இரண்டு கரண்டி அரிசி மாவை சேர்த்துக் கொள்ளுங்கள். அடுத்து ஒரு ஸ்பூன் அளவுக்கு ஆப்பிள் சீடர் வினிகரை சேர்த்துக் கொள்ளுங்கள். கடைசியாக ஒரு ஸ்பூன் தேனையும் இதனுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த மூன்றையும் நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள் இப்போது இது பசை போன்று ஆகிவிடும். இதை எடுத்து குதிகால் வெடிப்பு உள்ள இடத்தில் தடவ வேண்டும். இதை எப்போது தடவ வேண்டும் என்றால் இரவு நீங்கள் படுக்கைக்கு செல்லும் முன்னர் உங்கள் கால்களை நன்றாக வெந்நீரில் ஒன்றிலிருந்து பத்து நிமிடம் வரை ஊறவைத்து சுத்தம் செய்ய வேண்டும். 

அதற்குப் பின் கால்களில் தண்ணீர் இல்லாது ஒரு துண்டை பயன்படுத்தி நன்றாக உங்கள் கால்களை துடைத்துக் கொள்ளவேண்டும். அப்படி செய்தால்தான் கால்களில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறும். கால்களை சுத்தமாக்கி விட்டு இப்போது வெடிப்பு உள்ள பகுதிகளில் நாம் தயாரித்த இந்த பசையை தடவ வேண்டும். ஒரு வாரத்திற்கு இதேபோன்று குதிகால் வெடிப்பு உள்ள இடத்தில் இந்த பசையை தடவி வரவேண்டும் அதன்பின் உங்களுக்கு இருக்கக்கூடிய குதிகால் வெடிப்பு அனைத்தும் மறைந்துவிடும். உங்கள் கால்களும் மென்மையாகும்.

பாத வெடிப்பை போக்குவது இரண்டாவது வீட்டு வைத்தியம்
உங்களுடைய கால்களில் ஏற்பட்டுள்ள பாதவெடிப்பு பிரச்சனையை மிக எளிமையாக மெழுகுவர்த்திகளை கொண்டே அகற்ற முடியும். அதற்கு நாம் மெழுகுவர்த்தியில் உள்ள மெழுகை தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும். சாதாரண ஒரு கத்தியைப் பயன்படுத்தி மெழுகை எடுத்துக்கொள்ள முடியும். இதற்கு ஒரு மெழுகுவர்த்தி போதுமானது. 

இப்போது துருவிய இந்த மெழுகுடன் கடுகு எண்ணெய் சேர்த்துக் கொள்வோம். கடுகு எண்ணெய் எல்லா சூப்பர் மார்கெட்டுகளிலும் கிடைக்கக்கூடியது. இதை வாங்கி 3 ஸ்பூன் துருவிய மெழுகுடன் கலக்க வேண்டும். அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும் என்றால் ஒரு கிண்ணத்தில் கொதி நீரை எடுத்துக் கொள்ளுங்கள்; அதன்பின் கடுகு எண்ணெயும் சேர்த்துக் கலக்கி வைத்துள்ள கிண்ணத்தை இந்த சுடுநீர் உள்ள கிண்ணத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இப்போது தண்ணீரில் உள்ள சூடு காரணமாக இந்த மெழுகு எல்லாம் உருக ஆரம்பித்து விடும். இப்பொழுது இது ஓரளவிற்கு சூடு ஆறிய பின் ஒரு பசை போன்று ஆகிவிடும். இதை நீங்கள் தூங்க செல்வதற்கு முன்னர் உங்கள் கால்களை வெந்நீரினால் சுத்தப்படுத்தி சுத்தமான துண்டு கொண்டு கால்களை துடைத்த பின் காலில் வெடிப்பு உள்ள பகுதியில் பூச வேண்டும்.

பின்னர் இரவு முழுவதும் அப்படியே விட்டுவிட்டு மறுநாள் காலையில் எழுந்து சாதாரண தண்ணீரால் கால்களை கழுவுங்கள். ஒரு வாரத்திற்கு தொடர்ந்து இதே போன்று தடவினாலே போதும் குதிக்கால் வெடிப்புக்கள் அனைத்தும் காணாமல் போய்விடும். உங்களுடைய பாதமும் நன்றாக மென்மையாகி விடும்.
Reactions