இந்தியாவில் செட்டிநாடு சமையல் ரெசிபிக்கள் மிகவும் பிரபலமானவை அத்தோடு பலருக்கும் செட்டிநாடு ரெசிபிக்கள் பிடிக்கும். இதற்கு செட்டிநாடு ரெசிபிக்களில் பயன்படுத்தும் மசாலாக்கள் என்பவை தான் காரணம். செட்டிநாடு ரெசிபிக்களில் அசைவம்,சைவ ரெசிபிக்களும் சூப்பராக இருக்கும். meen kulambu recipe in tamil
அதில் ஒரு வகையாக வித்தியாசமான ரெசிபி தான் செட்டிநாடு மீன் குழம்பு.
வாருங்கள் வாசகர்களே செட்டிநாடு சைவ மீன் குழம்பு ரெசிபி எப்படி செய்வதென்று பார்ப்போம் ( mathi meen kulambu in tamil madras samayal recipe )
தேவையான பொருட்கள்
சைவ மீன் செய்வதற்கு
தட்டபயறு - 1½ கப்மிளகாய் தூள் - 3 டீஸ்பூன்
சோம்பு - 1½ டீஸ்பூன்
பூண்டு - 3 பற்கள்
உப்பு - சுவைக்கேற்ப
குழம்பு செய்வதற்கு...
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்வெந்தயம் - ¼ டீஸ்பூன்
தண்ணீர் - 2- 2½ கப்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2½ டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
புளிச்சாறு - 3 டேபிள் ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 10 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3
கடுகு - 1 டீஸ்பூன்
சோம்பு - ½ டீஸ்பூன்
தக்காளி - 1 (நறுக்கியது)
மல்லித் தூள் - 1.5 டேபிள் ஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
முதலில் தட்ட பயற்றை நீரிலே போட்டு இரவு முழுவதும் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதை கழுவி, மிக்சிஜில் போட்டு, அதனுடன் "சைவ மீன் செய்வதற்கு" கொடுத்துள்ள பிற பொருட்களையும் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒருஅலுமினிய தாள் அல்லது வாழை இலையில் அரைத்த விழுதை தட்டையாக பரப்பி மூடி, இட்லி பாத்திரத்தில் வைத்து, 15 இல் இருந்து 20 நிமிடம் வரைக்கும் வேக வைத்து இறக்கிக் கொள்ளுங்கள். பின்னர் மீனை ஓரளவு நீளத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
பிறகு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், வேக வைத்து வெட்டிய மீன்ர துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் வெந்தயம், சோம்பு, கடுகு, கறிவேப்பிலை சேர்த்து ஒரு நிமிடம் தாளிக்கவும்.
அடுத்து பச்சை மிளகாய், வெங்காயம், மற்றும் தக்காளி பழத்தை சேர்த்து, உப்பு தூவி நன்கு மென்மையாகும் வரை வதக்கி எடுக்கவும். ( meen kulambu amma samayal recipe in tamil )
பின்னர் அதில் மஞ்சள், மல்லித் தூள்,மிளகாய் தூள் என்பவற்றை எல்லாம் சேர்த்து அரை நிமிடம் வதக்கிய பின்னர் பழபுளிச்சாறு மற்றும் தேவையான அளவு நீர் என்பவற்றை சேர்த்து, நன்கு பச்சை வாசனை போகும் வரை கொதிக்க வைக்கவும்.
இறுதியில் பொரித்து வைத்துள்ள அனைத்தையும் போட்டு, குறைவான சுவாலையில் சில நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கினால், சுவையான செட்டிநாடு சைவ மீன் குழம்பு தயார்..